தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார்.
இவர் டுபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றிருந்தார்.
இந்த தொடரில் அஜித்தின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது.
இவரது வெற்றிக்கு இரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அத்துடன் நடிகர் அஜித்குமார் இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அஜித் ஓட்டுனராக களமிறங்கி வாகனம் ஓட்டிய போர்ஸ்சே ஜிடி4 பிரிவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது அணிக்கு ‘ஸ்பிரிட் ஆப் தி கேம்’ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், அஜித் அடுத்த கார் பந்தயத்துக்கு தயாராகி இருக்கிறார்.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 கார் ரேஸ் போர்த்துக்கலில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துக் கொள்வதற்கு தற்போது அஜித் போர்த்துக்கல் சென்றுள்ளார்.