ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்ற போது முறைப்பாட்டாளரின் சாட்சியாளர்களிடம் சாட்சி பதிவு இடம்பெற்றது.
இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த குற்றம் இடம்பெற்றிருக்காமென சந்தேகிக்கப்படுகிறது.
கிரித்தலை, ஹபரண மற்றும் கொட்டாவ பகுதிகளைச் சேர்ந்த பிரதிவாதிகள் மேலும் பெயர் குறிப்பிடப்படாத சிலருடன் இணைந்து இரகசியமாக சிறை வைக்கும் நோக்கில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கிரித்தலை இராணுவ முகாமின் முன்னாள் கட்டளையிடும் அதிகாரியொருவர் உள்ளிட்ட அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.