வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நாளைய தினம் வடக்கு, வடமத்திய. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழை நிலைமையில் தற்காலிக அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.