நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.
ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளதாகவும், அதனை தேவையான மட்டத்தில் பேணுமாறு குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பணிப்புரைக்கு அமைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.
அடுத்த சில மணித்தியாலங்களில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தே வான்தவுகளை திறப்பதில் மாற்றம் ஏற்படலாம் என தீப்தா ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார் .
அத்துடன் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த இரண்டு வான் கதவுகள் வழியாக, வினாடிக்கு 1,200 கன அடி கொள்ளளவு தண்ணீர் கலா ஓயாவிற்கு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.