மாத்தளை ஹப்புகஸ்லந்த பிரதேசத்தில் பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை விரட்டும் பணி நேற்று (08) இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாத்தளை மாவட்ட வனஜீவராசிகள் அதிகாரிகளின் தலைமையில் மாத்தளை மஹாவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளும் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கை ஐந்து (5) நாட்களுக்கு தொடரும் என மாத்தளை மாவட்ட வனவிலங்கு அதிகாரி திரு.நிஷாந்த குறிப்பிட்டார்.