திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளரை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திருகோணமலை மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாராச்சி 2025-01-01 இலிருந்து ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதால் குறித்த பதவிக்கு வெற்றிடம் ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த பதவியில் தற்போது கடற்றொழில் மற்றும் நீர்வழங்கல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரநிலை அதிகாரியான டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமாரவை நியமிப்பதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.