அமெரிக்காவின் பல மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல தசாப்தங்களுக்கு பின்னர் கடும் குளிரான வானிலை நிலவுவதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக 7 மாநிலங்களில் அவசர கால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மிஷூரி, கென்டகி, வேர்ஜினியா, மேற்கு வேர்ஜினியா உள்ளிட்ட மாநிலங்கள் அதில் உள்ளடங்குகின்றன. ஆர்க்டிக் சமுத்திர பகுதியில் நிலவும் குளிரான வானிலை, அமெரிக்காவையும் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை விமானப் பயணங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் வாகன போக்குவரத்தும் பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.