தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
கேப்டவுனில் இடம்பெறும் இந்த போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது, போஃலோ ஒன் முறைமையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முதலாம் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களை இழந்து, 194 ஓட்டங்களை பெற்றதுடன்,
தென்னாபிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 615 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.