ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர் நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார கால்நடை சுகாதார சேவையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.
இதில் 11 பேர் விசர் நாய்கடியால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.