கொழும்பு, புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.