ஐரோப்பிய நாடான மொன்டநேக்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
அந்நாட்டின் தென் பகுதியிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அங்கு வந்திருந்த விருந்தினர்களிடையே ஏற்ப்பட்ட வாக்குவாதத்தையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து மொன்டநேக்ரோவில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென அந்நாட்டு பிரதமர் Milojko Spajic தெரிவித்துள்ளார்.