சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் மற்றும் மதுபானங்களை நாட்டிற்கு எடுத்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பை வசிப்பிடமாக கொண்ட சந்தேக நபர் வியாபார நோக்கமான விமானப் பயணங்களில் ஈடுபட்டு வருபவர் என தெரியவந்துள்ளது. இந்தியாவின் பெங்களுர் நகரிலிருந்து சந்தேக நபர் வருகை தந்துள்ளார். இந்நிலையில் அவரை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.