சிறுநீரக நோhயாளர் கொடுப்பனவை 10000 ரூபாவா அதிகரிக்க வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் குறித்த கொடுப்பனவை டிசம்பர் மாதத்தின் பின்னர் ரத்து செய்யவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் முன்னெடுக்கும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களுக்கென பிரதேச செயலகங்கள் ஊடாக தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுகின்றன.
இதன்மூலம் மக்களுக்கு கிடைக்கப்பெறும் எவ்வித சலுகையும் நிறுத்தப்படமாட்டாதென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அஸ்வெசும 7500 ரூபாவிலிருந்து 10000 வரையிலும், 15000 வரையிலும், 17500 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.