எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கிடையில் பல கட்டங்களாக மதிப்பீடு செயற்பாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வழங்குவதற்கு 4 மாதகாலவகாசம் தேவைப்படுகிறது. எனினும் அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.