உலக பாதுகாப்பு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கக்கூடிய முப்படையை கட்டியெழுப்புவதற்கு உச்சக்கட்ட அர்ப்பணிப்புடன் செயலாற்றவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா இதனை தெரிவித்தார். திருகோணலை கடற்படை மற்றும் சமுத்திர ஆய்வு பீட கடற்படையின் பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மாத்திரம் எமது பாதுகாப்பு பிரிவினரை பயன்படுத்துவதில் உறுதியுடன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.