மஹபொல மாணவ புலமைப்பரிசில் தொகையை 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பதற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவதானம் செலுத்தியுள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கென தற்போது 5000 ரூபா மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. அதனை ஏப்ரல் மாதம் முதல் 7500 ரூபாவா அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மஹபொல மாணவ புலமைப்பரிசில் தொகையை 10000 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கு முன்னர் யோசனை முன்வைத்திருந்தது. எனினும் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறவில்லை.
5000 ரூபா மஹபொல புலமைப்பரிசிலை வழங்குவதற்கு வருடாந்தம் 300 கோடி ரூபா செலவிடப்படுகிறது.