இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
இரவுப் போட்டியாக Mount Maunganui வில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 11.45க்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி 8 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன் 14 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை இன்றைய போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்க்கக்கூடிய மைதானத்தின் பெரும்பகுதி மைதானத்தில் அமர்ந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.