ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராக பாரத் அருள்சாமியும் கட்சியின் பிரசார செயலாளராக ARV லோஷனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு இன்று கொழும்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியபோதே இந்த நியமனம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.