கொழும்பு – தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த சிசுவொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று (21) காலை தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த சிசு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.
எனினும், சிசு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.