இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தியாவில் இருந்து 383,257 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
அத்துடன், 180,414 பேர் ரஷ்யாவில் இருந்தும், 166,999 பேர் பிரித்தானியாவில் இருந்தும் நாட்டுக்கு வந்துள்ளனர்.