மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலவசமாக MOP உரம் 365 தொன் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய சேவை ஆணையாளர் பி.என்.சி.எச். குமாரிஹாமி தெரிவித்துள்ளார்.
தற்போது 150 தொன் உரம் 5 விவசாய சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மையங்களுக்கு உரம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த உரத் தொகுதி முழுமையாக கிடைத்தவுடன் மாவட்ட விவசாயிகளிடையே உடனடியாக பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.