நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரணகஹாவௌ பகுதியில் சிறுமியொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்சார தாக்கத்திற்கு உள்ளான சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் மின் கம்பமொன்றிலிருந்து வீட்டிற்கு மின் இணைப்பை பெற்றுள்ளதுடன் , மின் அரைப்பானை சிறுமி பயன்படுத்திய சந்தர்ப்பத்திலேயே மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.