விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நபரின் சடலத்தை மறைக்க முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் தாம் பொருத்திய மின்சார வேலியில் சிக்கி 58 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.