ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய ஜனாதிபத திரௌபதி முர்முவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபத இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
15 முதல் 17ம் திகதி வரை இந்திய விஜயம் அமையவுள்ளது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்த்ர மோதியுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஜனாதிபத அனுர குமார திஸாநாயக்க ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.