கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு பேர் இன்று (13) கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்டவர்கள் கிருலப்பனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்களெனவும் அவர்களில் இரு வயதானவர்களும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.