தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் காணப்படும் குறைந்த தாழமுக்கம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் வடமேற்கு திசை நோக்கி பயணித்து இலங்கையின் வடக்கு கரையோரத்தின் தமிழ்நாட்டு கரைப்பகுதியை அண்மிப்பதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மாகாணத்தில் மாலை வேளையில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மத்திய, சப்ரகமுவ, தென் , ஊவா , மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.