சிரியாவின் புதிய இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர் பெயரிடப்பட்டுள்ளார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட பஷார் அல் அரசாங்கத்தின் ஆட்சியில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பகுதியொன்றின் ஆளுனராக குறித்த இடைக்கால பிரதமர் இதற்கு முன்னர் செயற்ப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிரியாவின் ஆட்சி கவிழ்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இஸ்ரேல் முயற்சிப்பதாக துருக்கி உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
சிரியாவின் ஒரு சில பகுதிகளில் தமது படையினரின் செயற்பாடு உள்ளதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. சிரியாவின் எல்லையிலுள்ள கோலன் ஹைட்ஸ் என்ற பகுதியில் இஸ்ரேலின் ஆதிக்கம் காணப்படுகிறது.