பிரித்தானிய இளவரசர் வில்லியன் தோற்றத்தில் மிகவும் அழகான நபர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பெரிசில் இருவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
உண்மையில் வில்லியம் பார்ப்பதற்கு மிகவும் அழகான ஆண்மகன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்தினால் சேதத்திற்கு உள்ளான பெரிசின் நொட்ரே டேம் தேவாலயம் புனரமைப்பின் பின்னர் மீள திறக்கப்பட்டது.
ஆலயத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப் பெரிஸிற்கு விஜயம் செய்திருந்தார்.
இதேவேளை வில்லியமுடனான கலந்துரையாடலின் போது அரச குடும்பம் தற்போது எதிர்கொண்டுள்ள உடல் நலக் குறைவு பிரச்சினைகள் குறித்தும் ட்ரம்ப் கேட்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.