பேருவளை, மொரகல்ல, களுத்துறை உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
சுற்றுலாவுக்கான சிறந்த தளங்களில் இலங்கை முன்னிலைப் பெற்றுள்ளது. வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தருவதால் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது.
பேருவளை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தளங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.