மதவாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.