கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியின் கவுடன்கஹா பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிந்துள்ளார். 39 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொட்ரபில் கம்பஹா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.