இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 115 தொழுநோயாளர்களும் , கம்பஹா மாவட்டத்தில் 113 தொழுநோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.