அரச நிறுவனங்களுக்கு பாரிய செலவுச் சுமையாக இருக்கும் அதிசொகுசு வாகனங்களை உரிய செயன்முறையின் கீழ் அகற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். அரச நிறுவனங்களின் பயன்படும் இவ்வாறான அதிசொகுச வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கென பாரிய தொகை செலவிடப்படுவதை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான அதிசொகுசு வாகனங்களை அகற்றுவது பொருளாதாரத்திற்கு பயன்மிக்கதாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் காணப்படும் வாகனங்கள் தொடர்பில் உரிய ஆய்வை மேற்கொண்டு உரிய கொள்முதல் செயன்முறைகளை பின்பற்றி 2025.03.01க்கு முன்னர் உரிய அதிகாரிகளினால் அவற்றை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.