மலையக ரயில் மார்க்கத்தின் உடுவர 7ம் கட்டை பகுதியில் ஏற்ப்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை மற்றும் பண்டாரவளை நகரங்களுக்கிடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் உடவர பகுதியில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. ரயில் மார்க்கத்திலும் மண்திட்டுக்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. பண்டாரவளை நோக்கி பயணிக்கவிருந்த 4 ரயில்கள் தொடர்ந்தும் பதுளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட ரயில்களே கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவைள நோக்கி பயணிப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.