முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் தீக்கிரையாகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்.
அவரின் வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ பரவலில் சிக்குண்ட சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நபரொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.