இந்த மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் – 0.8 சதவீதமாக பதிவு செய்யப்பட்ட, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் நவம்பர் 2.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு பணவீக்கமானது, ஒக்டோபர் மாதத்தில் 1.0 சதவீதத்திலிருந்து 2024 நவம்பர் மாதம் 0.6 சதவீதத்திற்கு சரிவடைந்துள்ளது.
அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 1.6 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதத்திற்குச் சரிவடைந்துள்ளது.