நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன்படி இன்று யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 130 முதல் 120 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், நுவரெலியா மற்றும் பதுளையில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் உள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, சிறந்த காற்று தரக் குறியீடு(AQI) மதிப்பு 50க்கு கீழே இருக்க வேண்டும்.
இந்த நிலையில், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அஜித் குணவர்தன பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.