மாத்தளை – குருநாகல், ஒவிலிகந்த பிரதான வீதியின் தெல்விட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஹாகந்த பகுதியில் ஏற்ப்பட்ட மண்சரிவினால் மாத்தளை – குரநாகல் வீதியுடனான வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
பம்பரகஹாகந்த பகுதியின் சுமார் 50 ஏக்கர் பகுதி இவ்வாறு மண்சரிவு அனர்த்தத்திற்கு உட்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் குறித்த பகுதியிலுள்ள பல குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன்னெடுத்துள்ளது.