கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இதற்கமைய நாளை காலை 6 மணி வரை நீர்வெட்டு நடைமுறையிலிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அம்பத்தலையிலிருந்து எலிஹவுஸ் வரை நீரை விநியோகிக்கும் குழாயில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுலாகியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.