அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று முன்னிலையானார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியம் வழங்க அவர் நீதிமன்றம் வந்திருந்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்த அமைச்சர் விஜித ஹேரத்தை இன்றைய தினம் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு பெப்ரவரி மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.