நாரஹேன்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலையுடன தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
2016ம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது. மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் கைகலப்பாக மாறியதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக இடம்பெற்று வந்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.