தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் யாழில் நேற்று (28) தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்வோம் . அது குறித்து முடிவு செய்வோம் .
பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம் . நிச்சயமாக நேர்மறையாக இந்த விடயத்தில் ஈடுபடுவோம். ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம். அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.