உகாண்டாவின் கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 40 வீடுகள் மண்ணுள் புதையுண்டுள்ளது. இதன் விளைவாக 13 பேர் உயிரிந்துள்ளனர். புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழை காரணமாக புலம்புலி மாவட்டத்தில் இம்மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள உகாண்டா செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகையில், இந்த மண்சரிவு அனர்த்தத்திற்கு ஆறு கிராமங்கள் முகம் கொடுத்துள்ளன. மண்ணில் புதையுண்ட 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.