பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சட்டத்தரணி ஊடாக அர்ச்சுனா கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.