தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (27) வரை 18 மாவட்டங்களைச் சேர்ந்த, 141 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 66947 குடும்பங்களிலிருந்து 230743 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் உதய ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போது மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண சேவைகள் இடம்பெற்று வருவதாக, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர நாமல் லியனகே, குறிப்பிட்டார்.
தற்போது 15,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான மையங்களில் இருப்பதாகவும், அவர்களுக்கு மாவட்ட அளவில் உணவு மற்றும் இதர வசதிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். அதற்காக நாடுபூராகவும,; முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஆதரவும் பெறப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.