பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணம் , மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி தவறான உறவு முறைக்குள் உள்ளாவது, சில மருந்துகளுக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் தற்போது இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது .
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் விந்தியா குமரிபெலி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த ஆண்டு, எச்.வி.ஐ வைரஸால் பாதிக்கப்பட்ட 694 புதிய நோயாளிகள் நம் நாட்டில் பதிவாகியுள்ளனர்.
தரவுகளைப் பார்க்கும்போது, புதிதாக HIV வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.
குறிப்பாக இளைஞர்களிடையே கிடைக்கும் தரவுகளைப் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் 15% பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாகும்.
என தெரிவித்துள்ளார்.