டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையை பிற்போடுவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையே இதற்கு காரணமாகும்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமத் ஜயசுந்தர இது தொடர்பில் தெரிவித்தார். இதற்கமைய டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.