இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய பென்கல் புயல் இந்தியாவின் தமிழ்நாட்டை இன்று தாக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய பென்கல் புயல் தற்போது நாட்டை விட்டு கடந்து செல்லுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சென்னையை பென்கல் புயல் தாக்குவது தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.