வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. நல்லூர் முருகன் கோவில் உட்பட அதனை சூழவுள்ள பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மழை வெள்ளத்தால் வழக்கில் 23,786 குடும்பங்களைச் சேர்ந்த 78,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் மன்னார் மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளது.
அங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.