சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 4ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27 முதல் 29ம் திகதி வரை இடம்பெறாதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் டிசம்பர் 4ம் திகதி வரை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.